News September 26, 2025
உங்களுக்கு சளி, இருமல் இருக்கா?

பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி போன்றவை ஏற்படும். அவற்றில் இருந்து விடுபட, ◾வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ◾பூண்டுப் பற்களை நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். ◾சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருக வேண்டும். ◾இஞ்சியில் உப்பு சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். ◾கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ◾குறிப்பாக, தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும்.
Similar News
News September 26, 2025
செரிமானம் மேம்பட இந்த யோகாவை பண்ணுங்க!

வயிற்று தசைகளை இறுக்கி, செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, வாயு தொல்லையை நீக்க பவன முக்தாசனம் உதவும் ✱கால்களை நீட்டி விரிப்பில் படுக்கவும் ✱2 கால்களையும் மடித்து, தொடைப் பகுதியை மார்போடு சேர்த்து வைக்கவும் ✱2 கைகளால் காலை இறுக்கமாக பிடிக்கவும் ✱தலையை உயர்த்தி, நெற்றி கால் முட்டியை தொடும்படி வைக்கவும் ✱இந்த நிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE.
News September 26, 2025
நவராத்திரி 5-ம் நாள் சொல்ல வேண்டிய மந்திரம்!

நவராத்திரியின் 5-ம் நாளில் மகாலட்சுமியை வேண்டி, இந்த மந்திரத்தை சொல்லுங்கள்:
ஓம் நாகவாஹினாயை வித்மஹே
சக்ரஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.
பொருள்:
ஓம், சர்ப்பங்களை அணிந்த, சக்கரத்தை கையில் ஏந்திய வைஷ்ணவி தேவியின் சக்தி வடிவாகிய அந்த தெய்வத்தை நான் தியானிக்கிறேன். அந்த சக்திவாய்ந்த தெய்வம் எனது மனதை நல்ல வழியில் ஒளிரச் செய்யட்டும், புத்திசாலித்தனத்தை அருளட்டும். SHARE.
News September 26, 2025
இலங்கையை வைத்து பயிற்சி எடுக்கும் இந்தியா

ஆசிய கோப்பையின் கடைசி சூப்பர் 4 போட்டியில், இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ள பைனலுக்கு ஒரு பயிற்சியாகவே இந்தியாவுக்கு இருக்க போகிறது. அதனால் இதுவரை போதிய வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இந்த போட்டியில் முன்னுரிமை கொடுக்கப்படும். இந்தியாவின் பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.