News September 24, 2025
உங்களுக்கு கருவளையம் இருக்கா? இதை செய்யலாம்

கண்களுக்குக் கீழே கருவளையங்கள் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதை
நீக்க வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில இயற்கையான வழிகளை போட்டோக்களாக மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும் வீட்டிலேயே செய்யக்கூடியவை உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. கருவளையம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 24, 2025
அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. கில், அபிஷேக் சர்மா இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. முதல் 3 ஓவர்களுக்கு 17 ரன்கள் எடுத்திருந்த இந்தியா, அடுத்த 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது. தனது அதிரடியான ஆட்டத்தால் அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி (60 ரன்கள்) களத்தில் உள்ளார். கில், (29 ரன்கள்), ஷிவம் துபே (2 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
News September 24, 2025
ரத்த சோகை நீங்க இதை சாப்பிடுங்க

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் 1 சாப்பிட்டு வந்தால் பல உடல்நல பிரச்னைகள் தீரும். உடலில் ரத்தம் தூய்மை அடைவதுடன் ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும் என்றும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் பிரச்னைகள் குணமாகும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வெள்ளைப்படுதலுக்கு தீர்வு காண பெண்கள் இதை சாப்பிடலாம். SHARE IT.
News September 24, 2025
ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது: EPS

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டதால், ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டதாக EPS கூறியுள்ளார். நீலகிரி பிரசாரத்தில் பேசிய அவர், மிசாவில் திமுகவினர் கைதானதற்கு காரணமான காங்., உடனே கூட்டணி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், அறிவாலய மேல் மாடியில் CBI, ED சோதனை செய்தபோது, கீழ் தளத்தில் காங்., உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திமுக தான் அடிமை என்றும் EPS விமர்சித்துள்ளார்.