News August 7, 2025
உங்களிடம் ₹2,000 நோட்டுகள் உள்ளதா? இதை செய்யுங்க

2023 அக்டோபர் முதல் வங்கிகளில் ₹2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் கொடுத்து மாற்ற முடியும். அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் உள்ளிட்டவற்றுடன் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் சென்றால் பணம் அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்படும். தபால் நிலையம் மூலமும் ரிசர்வ் வங்கிக்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT.
Similar News
News August 7, 2025
5 மாதத்தில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள்: ராகுல் காந்தி

மகாராஷ்டிராவில் 2024 மே மாதம் லோக் சபா தேர்தலும், நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. லோக் சபாவில் வென்ற காங்., கூட்டணி, சட்டசபையில் தோல்வியடைந்தது. இதுபற்றி பேசிய ராகுல், இரு தேர்தலுகளுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், மாலை 5 மணிக்கு மேல் அதிகமான வாக்குப்பதிவுகள் நடந்ததுமே இத்தோல்விக்கு காரணமென்றார்.
News August 7, 2025
தொடர் விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சுதந்திர தின பொது விடுமுறை, வார விடுமுறை (ஆகஸ்ட் 15, 16, 17) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 4 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் நண்பர்கள் சீக்கிரம் திட்டமிடுங்கள்!
News August 7, 2025
இன்றே கடைசி… 6,238 ரயில்வே பணிகள்

ரயில்வேயில் 6,238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக.07) கடைசி நாளாகும். கிரேடு-1 பதவியில் 183 பணியிடங்கள், கிரேட்-3 பதவிகளுக்கு 6,055 பணியிடங்கள் உள்ளன. வயது: 18 முதல் 30 வரை. சம்பளம்: பதவியை பொறுத்து ₹19,900 முதல் ₹29,200 வரை. எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க <