News April 9, 2025
Whatsappல் இப்படி மெசெஜ் வருதா? உஷாரா இருங்க!

புதுசு புதுசாக யோசித்து, நூதனமாக Cyber மோசடி நிகழ்ந்து வருகிறது. அதில், புது என்ட்ரிதான் இது. முதலில், Whatsappல் ஒரு இமேஜுடன் மெசெஜ் வரும். உடனே ஒருவர் போன் செய்து, அந்த படத்தில் இருப்பவர் யார் என தெரியுதா? எனக் கேட்பார். யார் எனப் பார்க்க, இமேஜை டவுன்லோட் செய்தால் போதும். போனை ஹேக் செய்து விடுகின்றனர். ம.பி.யில், இப்படி ஒருவரின் அக்கவுண்டில் இருந்து 2 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 22, 2025
சூப்பர் ஓவரில் சூப்பராக சொதப்பிய இந்திய அணி..!

ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பை அரையிறுதியில் சூப்பர் ஓவர் வரை சென்று <<18351704>>இந்திய அணி தோல்வி<<>> அடைந்துள்ளது. பெரும் சோகம் என்னவென்றால், சூப்பர் ஓவரில் இந்தியா (0) ரன் எதுவுமே எடுக்கவில்லை. முதல் 2 பந்துகளில் (ஜிதேஷ், அஷுதோஷ்) 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். இதனையடுத்து, களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. ஆனால், பவுலர் சுயாஷ் சிங் அடுத்த பந்தை வைட் ஆக வீசியதால் வங்கதேசம் வென்றது.


