News April 10, 2025
உங்களுக்கு இப்படி போன் வருதா..? கவனமா இருங்க!

உங்களின் KYCயை அப்டேட் செய்யவில்லை என்றால், சிம் கார்ட் செயலிழந்து விடும் என வரும் அழைப்புகள் குறித்து TRAI எச்சரிக்கை செய்துள்ளது. இது பயனரின் தகவலை திருட வரும் மோசடி அழைப்புகள் என குறிப்பிட்டு, TRAI தரப்பில் இருந்து இது போன்ற அழைப்புகள் வராது என்று தெரிவித்துள்ளது. இப்படியான அழைப்புகள் வந்தால், 1930 என்ற சைபர் கிரைம் செக்யூரிட்டி நம்பரை அழைத்து தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 22, 2025
பிக்பாஸ் எவிக்ஷன்: கெமிக்கு குட்பை

பிக்பாஸில் இந்த வார எலிமினேஷனாக கெமி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கனி, வியானா, அரோரா, விக்ரம் உள்ளிட்ட 13 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகளை பெற்று கெமி எவிக்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவிக்ஷனில் இருந்து பிரஜின், வியானா தப்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளதாக கூறப்படுகிறது.
News November 22, 2025
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி: PM மோடி

தெ.ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் பேசிய PM மோடி, அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், உலகளவிலான சுகாதார குழு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளையும் PM முன்மொழிந்தார். இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
News November 22, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

வரும் 26-ம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி தொடங்கவுள்ளது. இதனால் பின்வரும் 3 ராசியினருக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும் எனக் கணிக்கப்படுகிறது: *சிம்மம்- வருமானம், முதலீட்டுக்கு லாபமும் அதிகரிக்கும். புதிய வசதிகள் கிடைக்கலாம் *மகரம்- பதவி உயர்வுக்கு வாய்ப்பு, வணிகத்தில் லாபம். *கடகம்-தொழிலில் வெற்றி கிடைக்கும். வருமானம், நிதிநிலை மேம்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.


