News March 22, 2025
செல்போன் பார்த்தபடி சாப்பிடறீங்களா? எச்சரிக்கை

செல்போனை எந்நேரமும் கைகளில் வைத்திருப்பது வழக்கமாகி விட்டது. சிலர் சாப்பிடும்போதும் கூட, செல்போனை பார்த்தபடியே சாப்பிடுவர். இது மோசமான பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டால் ஜீரணம் சிறப்பாக இருக்கும் என்றும், போனை பார்த்தபடி சாப்பிட்டால் கவனச்சிதறல் ஏற்படும். இதனால் சத்துகுறைபாடு, உடல் பருமன் ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News March 23, 2025
மேஷத்தில் சூரியன்: பணமழையில் 3 ராசிகள்!

சூரிய பகவான் மேஷ ராசியில் ஏப்ரல் 14இல் நுழைந்து மே 15 வரை அங்கேயே சஞ்சரிக்கிறார். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி மகரம், மிதுனம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு பணத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்க போகிறது. சமூகத்தில் மதிப்பு உயரும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. மன அமைதி இருக்கும்.
News March 23, 2025
தமிழ்நாட்டில் பாஜக ஒரு பலூன்: எஸ்.வி.சேகர்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் அதிக இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். பாஜக தமிழ்நாட்டில் பலூன் போல் உள்ளதாகவும், பலூன் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் வலுவானதாக கருத முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் அனைத்து தந்திரங்களையும் திமுக கூட்டணி முறியடித்து, மீண்டும் ஆட்சியில் அமர்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 23, 2025
CSK, MI அணிகளின் Playing XI இதோ!

சிஎஸ்கே அணியில் ருதுராஜ்(C), ரச்சின், தீபக் ஹூடா, சிவம் துபே, ஜடேஜா, சாம் கர்ரன், தோனி(WK), அஸ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் களமிறங்குகிறார்கள். அதேபோல், எம்ஐ அணியில் ரோகித், ரையான் ரிக்கெல்டன்(WK), வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ்(C), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், சான்ட்னர், தீபக் சாஹர், போல்ட், சத்யநாராயண ராஜு இடம்பெற்றுள்ளனர்.