News September 29, 2025
தினமும் இதை செய்கிறீர்களா?

தினசரி பழக்கவழக்கங்கள் நீண்ட கால ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில பழக்கவழக்கங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இவை மன அழுத்தத்தை குறைந்து, மனநிலையை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதில் நீங்கள் எதை செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 29, 2025
BREAKING: கரூர் சம்பவம்.. 3 பேர் அதிரடி கைது

கரூர் சம்பவம் தொடர்பாக சோசியல் மீடியாவில் வதந்தி பரப்பியதாக BJP-ன் சகாயம், தவெகவை சேர்ந்த சிவனேஸ்வரன், சரத்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவிட்ட 25 சோசியல் மீடியா கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது கவனிக்கத்தக்கது.
News September 29, 2025
மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News September 29, 2025
BREAKING: வெளிநாட்டு படங்களுக்கு 100% வரி

வெளிநாட்டு படங்களுக்கு டிரம்ப் 100% வரிவிதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவிடம் இருந்து சினிமா வர்த்தகத்தை மற்ற நாடுகள் திருடுவதாகவும், இந்த நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணவே இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளின் படங்களை காட்டிலும் இந்திய படங்களே அதிகம் வெளியாவதால், இது இந்திய சினிமா துறையை பாதிக்கும் என கூறப்படுகிறது.