News October 5, 2025
இதெல்லாம் பண்றீங்களா? கிட்னி ஸ்டோன் வரும்!

உட்கார்ந்தே இருப்பது, தண்ணீர் அருந்துவதையே மறப்பது, நைட் ஷிஃப்டில் பணிபுரிவதால் கிட்னி ஸ்டோன் உருவாகும் ஆபத்து 15% அதிகமாகும் என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் உள்பட அனைவருக்கும் இத SHARE பண்ணுங்க.
Similar News
News October 5, 2025
அதிகாலையில் பிரபல தமிழ் நடிகை வீட்டில் பரபரப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதிகாலையில், காவல்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, உடனே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சொர்ணமால்யா வீட்டிற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, CM, த்ரிஷா உள்ளிட்டோர் வீட்டிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
News October 5, 2025
SC-ல் மேல்முறையீடு செய்த தவெக நிர்வாகிகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தலைமறைவாக உள்ள N.ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மனுவை விரைந்து விசாரிக்க கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் உள்ளனர்.
News October 5, 2025
கரூர் விவகாரம்: இன்றே விசாரணையை தொடங்கும் SIT

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்திருந்தது. இந்நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், நாமக்கல் எஸ்பி விமலா, எஸ்பி சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ள இக்குழு கரூருக்கு விரைந்துள்ளது. இன்றே விசாரணையை தொடங்கும் இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவதோடு, சிசிடிவிகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளனர்.