News September 26, 2025
செரிமானம் மேம்பட இந்த யோகாவை பண்ணுங்க!

வயிற்று தசைகளை இறுக்கி, செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, வாயு தொல்லையை நீக்க பவன முக்தாசனம் உதவும் ✱கால்களை நீட்டி விரிப்பில் படுக்கவும் ✱2 கால்களையும் மடித்து, தொடைப் பகுதியை மார்போடு சேர்த்து வைக்கவும் ✱2 கைகளால் காலை இறுக்கமாக பிடிக்கவும் ✱தலையை உயர்த்தி, நெற்றி கால் முட்டியை தொடும்படி வைக்கவும் ✱இந்த நிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE.
Similar News
News September 26, 2025
3-வது முறையாக CPI பொதுச் செயலாளரானார் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 3-வது முறையாக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். CPI-ஐ பொறுத்தவரை 75 வயதுக்கு உட்பட்டவர்களே நிர்வாக குழு பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற நிலையில், டி.ராஜாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 76 வயதான ஒருவர், பதவியில் நீடிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை. 2019 முதல் CPI பொ.செ.,வாக உள்ள ராஜா, வேலூர், சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்.
News September 26, 2025
மார்க் அடிப்படையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

195 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை DRDO வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: B.E, Diploma, ITI படிப்பில் ECE, CSE, EEE, Mechanical. வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். சம்பளம்: DRDO RCI-யின் ஆட்சேர்ப்பு விதிகளின்படி வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.28. தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் பணி. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 26, 2025
BREAKING: திமுகவில் இணைந்தவுடன் முக்கிய பதவி

அதிமுகவிலிருந்து விலகியிருந்த மருது அழகுராஜ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தித் தொடர்பாளர் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பேச்சாளராகவும், ‘நமது எம்ஜிஆர்’ அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இவர் இருந்தார். ஜெ.,வின் அரசியல் உரைகளை எழுதிய அனுபவமுடைய இவர், இனி திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பார்.