News September 12, 2025
உடல் வலுபெற இந்த யோகா காலையில் பண்ணுங்க!

*தரையில் நேராக நிற்கவும்.
*பிறகு ஒரு காலை மட்டும் முன்னால் வைத்து, மற்றொரு காலை பின்னால் வைக்கவும்.
*முன் காலின் பாதங்களை ஊன்றி, பின்காலின் விரல்களை மட்டும் ஊன்றி வைக்கவும்.
*2 கைகளையும் மேலே எழுப்பி ஒன்றிணையுங்கள்.
*இந்தநிலையில் 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதேபோல, கால்களை மாற்றி செய்யவும்.
அனைத்து தசைகளும் வலுபெற இந்த வீரபத்ராசனம் உதவும்.Share it.
Similar News
News September 12, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று(செப்.12) தாறுமாறாக மாறியுள்ளது. அதன்படி, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹90 உயர்ந்து ₹10,240 ஆகவும், சவரன் ₹720 அதிகரித்து ₹81,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத புதிய உச்சமாக 1 சவரன் தங்கம் ₹82,000-ஐ நெருங்கியுள்ளதால் நடுத்தர மக்களின் தங்கம் வாங்கும் கனவு கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
News September 12, 2025
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு!

திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிவதால், ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆவதாக தகவல் வெளிவந்துள்ளது. மொத்தமுள்ள 22 அறைகளும் நிரம்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில் 66,312 பேர் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். அதேநேரம், உண்டியலில் ₹3.81 கோடி காணிக்கை வந்துள்ளதாகவும் TTD நிர்வாகம் அறிவித்துள்ளது.
News September 12, 2025
வடை மடிக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள்: EPS

உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள், ஆற்றில் கிடக்கிறது (அ) டீக்கடைகளில் வடை மடிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக EPS கடுமையாக சாடியுள்ளார். சமீபத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இந்த முகாமில் பெறப்படும் 46 பிரச்னைகளை கண்டுபிடிக்க தமிழகத்துக்கு ஒரு முதல்வர் தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.