News March 29, 2024

8% வளர்ச்சி காண இதை செய்ய வேண்டும்

image

சீர்திருத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால், 2047இல் இந்திய பொருளாதாரம் 8% வளர்ச்சி அடைய முடியும் என்று ஐஎம்எஃப் இந்திய நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “8% பொருளாதார வளர்ச்சி என்பது கடினமானது. நிலம், தொழிலாளர், மூலதனம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறினார்.

Similar News

News March 13, 2026

BREAKING: கட்சியில் இணைந்தார் சசிகலா..

image

அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் (அஇபுதமமுக) சசிகலா இணைந்துள்ளார். இக்கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக கூறி கொடியையும் அறிமுகப்படுத்திய அவர், தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் தன்னை இணைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தமிழகம், புதுவையில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

News March 13, 2026

EPS தலைமையில் 10 தோல்விகள்: OPS

image

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்று, அதை கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இருப்பவர்தான் அவர் (EPS) என்று OPS விமர்சித்துள்ளார். அவரது பெயரை சொல்லக்கூட தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தென்காசி பரப்புரையில் பேசிய அவர், EPS தலைமையில் அதிமுக சந்தித்த 10 தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியை சந்தித்தாக குறிப்பிட்டார். நன்றி மறந்தவர்களுக்கு தமிழக மக்கள் எப்போதுமே வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

News March 13, 2026

வங்கிக் கணக்கில் ₹5000 வந்தது.. இன்ப அதிர்ச்சி

image

தேர்தல் நெருங்கும் நிலையில், புதுச்சேரி அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2025-ல் சம்பா பருவத்தில் உயர் விளைச்சல் ரக நெல் சாகுபடி செய்த 5,098 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹5,000 வீதம் ₹4 கோடி ஊக்கத் தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய நெல் சாகுபடி செய்த 296 விவசாயிகளுக்கு ₹25.5 லட்சம் ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!