News June 26, 2024
இதயம் காக்க இதை செய்யுங்க

இதயத்தை ஆரோக்கியமாக பேண சைக்கிளிங், நீச்சல், நடைபயிற்சியை 30-45 நிமிடங்கள் மேற்கொள்ள வேண்டும். சிவப்பு அரிசி, கருப்பு கவுனி, சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். விளமீன், மத்திச்சாளை, டுனா மீன் குழம்புகள் இதயத்திற்கு நல்லது. நார்ச்சத்து நிறைந்த கீரை மற்றும் காய்கறிகளை உண்பது நலம். பொறித்த உணவுகள், ஒரே எண்ணெய்யை பலமுறை பயன்படுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
Similar News
News November 6, 2025
நேர்மையாக தேர்தல் நடந்தால், NDA இருக்காது: பிரியங்கா

பிஹார் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், கோவிந்த்கஞ்ச் பகுதியில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். இதில் பேசிய அவர், பிஹார் தேர்தல் நேர்மையாக நடந்தால், NDA ஆட்சி தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார். வளர்ச்சியை விட மதத்திற்கே பாஜக முன்னுரிமை அளிப்பதாக விமர்சித்த அவர், கடந்த 3 ஆண்டுகளில் பிஹாரில் 27 பாலங்கள் இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டினார்.
News November 6, 2025
நாளையுடன் முடிகிறது… உடனே இதை பண்ணுங்க

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை அப்லோடு செய்ய நாளையே(நவ.7) கடைசி நாள் என TNPSC தெரிவித்துள்ளது. நாளை சான்றிதழ்களை அப்லோடு செய்யாதவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல பரிசீலிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.<
News November 6, 2025
டி20ல் வாஷிங்டன் சுந்தர் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அசத்தினார். இந்நிலையில், சர்வதேச டி20-யில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையையும் சுந்தர் பெற்றுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், இந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கியுள்ளார். இதன்மூலம் 3 ஃபார்மட்டிலும் தடம் பதிக்கும் ஆல்ரவுண்டராக வாஷி உருவாகி வருகிறார்.


