News September 6, 2025
குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

குழந்தைகளும் தற்போது போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க : பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன்களை உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும். பெற்றோர் செய்வதை தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் *வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் *ஏதாவது கலை திறனில் அவர்களை ஈடுபடுத்துங்கள். SHARE IT.
Similar News
News September 6, 2025
அல்காரஸின் வேகத்தில் வீழ்த்த நட்சத்திர வீரர் ஜோகோவிச்

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அல்காரஸ்(22), ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இதில் 38 வயதாகும் ஜோகோவிச், அல்காரஸின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். அதனால் 6-4, 7-6, 6-2 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்றார். 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மீண்டும் ஜோகோவிச் தவறவிட்டார்.
News September 6, 2025
இபிஎஸ் நீக்கினார்.. MGR போல் செங்கோட்டையன் பதில்

பதவியில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கவில்லை; மகிழ்ச்சி என MGR பாணியில்(திமுகவில் இருந்து நீக்கியபோது) செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். நேற்று(செப்.5) செய்தியாளர்களை சந்தித்த பிறகு, இன்று தொண்டர்களின் எண்ணங்களையே பிரதிபலித்ததாக தனது X பக்கத்தில் திட்டவட்டமாக விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், சற்றுமுன், கட்சி <<17629139>>பொறுப்புகளில் இருந்து அவரை<<>> இபிஎஸ் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 6, 2025
மொட்டையடித்த AR முருகதாஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெற்றி பெற வேண்டி, அதன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பழனி தண்டாயுதபாணி கோயிலில் மொட்டையடித்துள்ளார். இதன் பின்னர் சாமி தரிசனம் செய்த அவர், ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் இயக்கியுள்ள இப்படம், அவருக்கு கம்பேக்காக அமைந்துள்ளது.