News April 25, 2025
மாணவர் சேர்க்கை அதிகரிக்க இதை பண்ணுங்க: அன்புமணி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2025- 26ம் கல்வியாண்டில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போதிய ஆசிரியர்கள் இல்லாததும் இதற்கு காரணம் எனத் தெரிவித்த அன்புமணி, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News April 25, 2025
இன்சூரன்ஸில் பயங்கரவாத மரணமும் உள்ளடங்குமா?

‘பயங்கரவாத மரணம்’ என்ற பிரிவு இல்லாத பாலிசிகளில் தீவிரவாத தாக்குதல் மரணங்களில் காப்பீடு கோர முடியாது. அதே நேரத்தில், தனிநபர் விபத்து காப்பீட்டில், ‘பயங்கரவாத பாதுகாப்பு’ என்பது சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தால், இழப்பீடு கோரலாம். பயணக் காப்பீட்டு விதிமுறைகளில் ADB(Accidental Death Benefit) ரைடர் போன்ற சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
News April 25, 2025
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்.. இபிஎஸ் வியூகம்

கூட்டணி தொடர்பாக மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். கூட்டணி குறித்து கவலைப்படாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார். இபிஎஸ் குறிப்பிடும் சில கட்சிகள் எவையாக இருக்கும்?