News December 28, 2024
படுத்த உடனே தூங்க இதை பண்ணுங்க!

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, 10-3-2-1 ஃபார்முலா பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்கப்போவதற்கு 10 மணி நேரத்திற்கு முன் டீ/காஃபி குடிப்பதை தவிர்க்கவும். 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே பணி செய்வதை நிறுத்துங்கள். மொபைல்/டிவி 1 மணி நேரத்திற்கு முன்பே ஆஃப் செய்யுங்கள். இதை கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
Similar News
News March 22, 2026
திமுகவா, பாஜகவா? அடிமையாக்குவது யார்?

கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் சிறிய கட்சிகளை பெரியண்ணன் மனநிலையில் அணுகுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதிமுகவை அடிமையாக்கி டெல்லியிலிருந்து இயக்குவதாக திமுக விமர்சனம் செய்து வருகிறது. விசிக, சிபிஎம், சிபிஐ, தவாகவுக்கு தொகுதிகளை குறைத்து திமுக அதே மனநிலையில் பார்க்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தங்கள் உழைப்பை மதிக்கவில்லை என விசிகவினர் SM-ல் வெளிப்படையாகவே பதிவிட்டு வருகின்றனர்.
News March 22, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார்

திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறுவதாக வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வதாக திமுக கூறியது. ஆனால், கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, 10 அம்ச கோரிக்கை உள்ளிட்ட நாங்கள் வைத்த எந்த கோரிக்கையும் திமுக பரிசீலிக்கவில்லை என்பதால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.
News March 22, 2026
ரகசிய ஆலோசனை நடத்தினாரா அண்ணாமலை?

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கரூரில் உள்ள முக்கிய பிரமுகர் வீட்டில் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் கேட்டாராம். இதுதொடர்பான போட்டோ வெளியாகி தலைமையை கடுப்பாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், மரியாதை நிமித்தமான சந்திப்பு, தொண்டர்கள் விருப்பப்பட்டு எடுத்த போட்டோ என அண்ணாமலை சமாளித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.


