News October 19, 2025

குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க First இத பண்ணுங்க!

image

இந்தியர்களின் அடிப்படை ஆவணங்களுள் மிக முக்கியமான ஒன்று ஆதார். ஆதார் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. எனவே, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க, இப்போதே ஆதாரை புதுப்பிப்பது முக்கியம். இதற்காக, 2026 செப்.30 வரை, 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு செய்யப்படும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு, இலவசமாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது.

Similar News

News October 19, 2025

47 முறை ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: காஸா ஊடகம்

image

போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்ரேல் 47 முறை மீறியதாக காஸா ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 143 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்து பிணைக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் வரை, காஸாவுக்கு உதவி பொருள்களை எடுத்து செல்லும் முக்கிய வழியான ரஃபா எல்லை திறக்கப்படாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

இந்தியில் வாழ்த்து சொன்ன சேகர்பாபு

image

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 800 வடஇந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு பரிசு பொருள்களை வழங்கி அமைச்சர் சேகர்பாபு இந்தி மொழியில் வாழ்த்து தெரிவித்தார். இதன்பின் அவர் பேசுகையில், வடஇந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

News October 19, 2025

துருவ் விக்ரமின் அடுத்த படம் இதுவா?

image

’பைசன்’ படத்துக்கு பிறகு துருவ் விக்ரமை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவருடைய அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது. இந்நிலையில், துருவ்வின் அடுத்த படத்தை ’டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவார் என கூறப்படுகிறது. தற்போது, அவர் ரவி மோகனை வைத்து ’கராத்தே பாபு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ரிலீஸ் ஆனதும் துருவ் உடனான படத்தை தொடங்கலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!