News May 7, 2025
காலையில் எழுந்ததும் முதல் விஷயமா இத பண்ணுங்க!

காலையில் எழுந்ததும் கட்டிலில் இருந்து காலை கீழே வைப்பதற்கு முன்பாக, Stretches (உடலை நீட்டி வளைப்பது செய்ய அறிவுறுத்துகிறார்கள். சாதாரணமாக சோம்பல் முறிக்காமல் உடலை நன்கு வளைத்து நெளித்து இதை செய்யவேண்டும். கை விரல் நுனி முதல் கால் விரல் நுனி வரை உணர்ந்து செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது, உடல் சோம்பல் நீங்கி மனதில் உற்சாகம் ஏற்படும். இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.
Similar News
News December 15, 2025
SPORTS 360°: ஓடிசா மாஸ்டர்ஸில் உன்னதி, கிரண் சாம்பியன்

*மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை மாணவி தங்கம் வென்றார். *ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டனில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடாவும், ஆண்கள் பிரிவில் கிரண்ஜார்ஜும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
*38 அணிகள் பங்கேற்கும் சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது.
News December 15, 2025
வரலாற்றில் இன்று

*1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
*1950 – இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைந்தநாள்.
*1995 – ஈழத்தமிழருக்கு ஆதரவாக அப்துல் ரவூஃப் தீக்குளித்து இறந்தார்.
*1997 – தென் கிழக்கு ஆசியா அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.
*2013 – தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
News December 15, 2025
அமித்ஷாவுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன்

டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும், தனது யாத்திரை பற்றி அமித்ஷா கேட்டறிந்ததாகவும் கூறினார். மேலும் புதுக்கோட்டையில் முடிவடையும் யாத்திரையில் அமித்ஷா (அ) மோடி பங்கேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


