News October 30, 2025

மூட்டு வலி நீங்க தினமும் இத பண்ணுங்க!

image

★இதய ஆரோக்கியம் மேம்பட்டு, மூட்டு வலிமை அதிகரிக்க ‘ஸ்குவாட்ஸ்’ செய்யுங்க ★செய்முறை: கால்களை தோள்பட்டை அகலத்தை விட சற்று அகற்றி வைத்து நிற்கவும். முதுகை நேராக வைத்து, தோப்புக்கரணம் போடுவது போல Chair position-ல் அமரவும். கைகள் முன்னால் நீட்டி வைத்திருப்பது அவசியம். குதிகால்களில் அழுத்தம் கொடுத்து மேலே எழவும் ★இவ்வாறு 2 செட்களாக ஆரம்பத்தில் 15- 20 வரை செய்யலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Similar News

News October 30, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1800 குறைந்து ₹88,800-க்கும், கிராமுக்கு ₹225 குறைந்து ₹11,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News October 30, 2025

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…

image

4,662 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12-ல் நடைபெற்று, அதன் முடிவுகள் அக்.22-ம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஆன்லைன் மூலம் வரும் நவ.7-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

ஃபிலிம்பேர் விருது சர்ச்சை: அபிஷேக் பச்சன் வேதனை

image

’I want to talk’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை நடிகர் அபிஷேக் பச்சன் வென்றிருந்தார். தனது செல்வாக்கை பயன்படுத்திதான் அவர் விருதை வாங்கினார் என SM-ல் பலர் விமர்சித்தனர். இந்நிலையில், எந்த விருதையும் பிஆர் செய்தோ, பணம் கொடுத்தோ வாங்கியதில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், உங்களை அமைதிப்படுத்த இன்னும் கடினமாக உழைப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!