News March 30, 2025
கோடை விடுமுறையில் இதை செய்யுங்க: பிரதமர்

கோடை விடுமுறையின் போது புதிய பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, திறமைகளை மேம்படுத்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, தான் சிறு வயதில் கோடை விடுமுறையை புதியதாக எதாவது ஒன்றை கற்றுக்கொள்ள பயன்படுத்தியதாகவும் நினைவுகூர்ந்தார். கோடை விடுமுறைக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள ‘My Bharat’ காலண்டரை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.
Similar News
News January 16, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 16, 2026
ஈரானில் 12,000 பேர் பலி.. நாடே சோகத்தில் ஆழ்ந்தது!

ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனதை உலுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை வாங்க வேண்டும் அல்லது வெகுஜன புதைகுழியில் புதைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
News January 16, 2026
ஆமிர்கான் படத்தில் சாய் பல்லவி.. வைரல் போஸ்டர்!

தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகை சாய் பல்லவி, பாலிவுட் படங்களின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வரும் அவர்,
ஆமிர் கானின் தயாரிப்பில், ‘ஏக் தின்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் ஹீரோவாக நடிக்கிறார். சுனில் பாண்டே இயக்கிவரும் இந்த படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.


