News December 6, 2024
திருமணத்திற்கு முன் இதை கட்டாயம் பண்ணுங்க!

Thalassemia என்ற கொடிய நோயில் இருந்து குழந்தைகளைக் காக்க, திருமணத்திற்கு முன்பே அதற்கான பரிசோதனை செய்வது அவசியம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். நாட்டில் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்களுக்கு இந்த பிரச்னைகள் இருந்தால் அது குழந்தைக்கும் பரவும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கடுமையாகக் குறையும். சோர்வு, தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
Similar News
News January 8, 2026
SPORTS 360°: வெற்றியுடன் தொடங்கிய பி.வி.சிந்து

*ஆஷஸ் தொடரில் 4-வது வெற்றியை ஆஸ்திரேலியா அணி நெருங்கியுள்ளது. *மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி, இந்தியாவின் பி.வி.சிந்து முதல் வெற்றியை பெற்றார். *தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர். *தம்புல்லாவில் நடந்த டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது.
News January 8, 2026
விஜய்யை மீண்டும் கூட்டணிக்கு அழைத்த தமிழிசை

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவை தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஜய் NDA-வில் சேரும் போது தான் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எப்படி NDA-வில் உள்ள கட்சிகளுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறதோ, அதே பொறுப்பு விஜய்க்கும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 8, மார்கழி 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்:6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்


