News August 6, 2025

தூங்குவதற்கு முன் இதை செய்யுங்க!

image

பருவமழை காலத்தில் தூங்குவதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீர் அல்லது பானங்களை அருந்த வேண்டாம். அது சளி மற்றும் இருமல் பிரச்னையை ஏற்படுத்தும். உங்கள் பாதங்கள் ஈரமாக இருந்தால், பூஞ்சை தொற்று ஏற்படலாம். அறை ஈரப்பதமாக இருந்தால், பாக்டீரியாக்கள் வளர்ந்து நோய் ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

Similar News

News August 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கேள்வி ▶குறள் எண்: 419 ▶குறள்: நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. ▶பொருள்: தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

News August 6, 2025

2035-ல் நிலவிற்கு செல்லும் பாகிஸ்தான்!

image

சீன ஆதரவுடன் 2035-ல் நிலவில் தரையிறங்க பாக்., தயாராகி வருகிறது. அதேபோல், 2026-ல் சீன விண்வெளி மையத்திற்கு தங்களது விண்வெளி வீரரை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாக்., அமைச்சர் அஷான் இக்பால், சீனாவில் ஆராய்ச்சியாளர்களுடன் பேசிவருகிறார். ஆனால், பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான SUPARCO இதுவரை ஒரு செயற்கைக்கோளை கூட பிற நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் விண்ணில் ஏவியது இல்லை.

News August 6, 2025

கஸ்டமர்களுக்கு அலர்ட் கொடுத்த HDFC

image

APK FILE மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு HDFC எச்சரித்துள்ளது. வங்கி அதிகாரி என்ற பெயரில் மோசடிக்காரர்கள் ஒரு APK FILE-ஐ அனுப்புவதாகவும், அதை டவுன்லோடு செய்தால், உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் அவர்களுக்குச் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே re-KYC, Tax Returns என எந்த லிங்க் வந்தாலும் அதை க்ளிக் செய்ய வேண்டாம் எனவும், 3ம் தர ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!