News October 21, 2025
வாழ்வில் ஒருமுறையாவது இதை செய்து விடுங்கள் PHOTOS

வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் உலகில் ஏராளம். எழுந்திருப்பது, ஆபீஸுக்கு போவது, வீடு திரும்புவது, தூங்குவது… இப்படி போரடிக்கும் தினசரி வாழ்க்கையில் இருந்து சற்றே விலகி, கொஞ்சம் திரில்லிங்கான சாகசங்களை செய்து பாருங்கள். இது உங்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் ஒரு முறையாவது செய்ய வேண்டிய சில சாகசங்களை, மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள்.
Similar News
News January 18, 2026
திருநெல்வேலி மாவட்டத்தில், இரவு ரோந்துப்பணி காவல் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஜன.17) இரவு உட்கோட்ட ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தேவர்குளம் மாரி செல்வி,நாங்குநேரி சுதா, பழவூர் சுரேஷ் குமார், சேரனமகாதேவி மங்கையர்க்கரசி,கல்லிடை குறிச்சி கலா ஆகியோர், திருநெல்வேலி ஊரகம், நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் உட்கோட்டங்களில், ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.
News January 18, 2026
TN காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 17, 2026
ஹாஸ்பிடலில் துரைமுருகன்.. நலம் விசாரித்த CM ஸ்டாலின்

அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்த CM ஸ்டாலின், துரைமுருகனின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். மேலும், உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்கவும் டாக்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், அவரது உடல்நலம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


