News January 25, 2025
ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணுங்க பாஸ்..❤️

இயந்திரத்தனமாகவே மாறிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக பேச கூட நேரம் இருப்பதில்லை. ஆனால், மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 4 முறையாவது கட்டிப்பிடித்தல் அவசியம் என பல ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆதரவாக தொட்டு பேசுவதும், கட்டிப்பிடிப்பதும் லவ் ஹார்மோனான ‘ஆக்ஸிடாகின்’-ஐ அதிகம் சுரக்க செய்கிறதாம். இது ஸ்ட்ரெஸ், பயம், கவலையை போக்கி, மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
Similar News
News November 14, 2025
வாக்குகளை பிரித்தாரா ஒவைஸி?

பிஹார் தேர்தலில் ஒவைஸியின் AIMIM கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியிலும் சேராமல், ஆளும் கூட்டணியுடனும் இணையாமல் போட்டியிடுவது இவரின் வழக்கமாக உள்ளது. முஸ்லிம்கள் மெஜாரிட்டி உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இவர், முஸ்லிம் வாக்குகளை பிரித்துவிட்டதும் பல தொகுதிகளில் MGB கூட்டணி தோல்விக்கு காரணம் எனப்படுகிறது.
News November 14, 2025
மாஸ்க்கை அகற்ற முடியாது.. யார் இந்த புஷ்பம் ப்ரியா?

நிதிஷ்குமாருக்கு நெருக்கமான அரசியல் பிரபலத்தின் பேத்தியான புஷ்பம் ப்ரியா செளத்ரியின் புளூரல்ஸ் கட்சி, 243 தொகுதிகளிலும் போட்டியிட்டது. எப்போதும் கருப்பு உடை, முகக்கவசம் அணிந்திருக்கும் புஷ்பம், தேர்தலில் வென்ற பிறகே மாஸ்கை அகற்றுவேன் என சவால் விட்டிருந்தார். ஆனால், ஒரு இடத்தில் கூட அக்கட்சி முன்னிலை பெறவில்லை. புஷ்பம் போட்டியிட்ட டர்பங்கா தொகுதியில், இதுவரை 750 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
News November 14, 2025
LSG அணியில் இணையும் ஷமி?

ஷமி வரும் 2026 IPL-ல் Lucknow Super Giants அணியில் இணைந்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. Sunrisers Hyderabad அணியில் விளையாடி வந்த அவரை, Trade மூலம் LSG வாங்கியுள்ளதாம். LSG-யில் அனுபவமிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறையை ஷமி தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இது Cash Trade-ஆ அல்லது வேறொரு வீரரை கொடுத்து ஷமியை LSG வாங்குகிறதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.


