News September 26, 2025
இந்த 2 பழக்கம் இருக்கா? ஹார்ட் அட்டாக் கன்ஃபார்ம்

காலை உணவை தவிர்ப்பது, இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த 2 பழக்கங்களால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம். பிறகு நாளடைவில், ஹார்ட் அட்டாக்குக்கு வழிவகுக்கும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. எனவே இந்த தவறுகளை செய்யாதீர்கள் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
Similar News
News September 26, 2025
மயிலாடுதுறை: மக்களே இதை செய்தால் கரண்ட் Bill வராது!

மயிலாடுதுறை மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, பின்பு உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவகத்தை அணுகவும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 26, 2025
ஒரே நாளில் விலை ₹3000 உயர்வு.. இதுவே முதல்முறை

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி ₹3 அதிகரித்து ₹153-க்கும், கிலோ வெள்ளி ₹3000 அதிகரித்து ₹1,53,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 9 நாள்களில் மட்டும் சுமார் ₹11,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
News September 26, 2025
தேர்வாளர்களிடம் தான் கேட்கணும்: கருண் நாயர்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காதது குறித்து தேர்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும் என கருண் நாயர் கூறினார். வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்ததாக குறிப்பிட்ட அவர், ENG தொடரில் கணிசமான பங்களிப்பை அளித்திருந்தாலும், அணி தேர்வுக்கு அதுமட்டுமே காரணமாகாது எனவும் சுட்டிக்காட்டினார். கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கி இருக்கணும் என நினைக்கிறீங்களா?