News September 29, 2025
SIM CARD-களுக்கு Expiry Date இருக்கா?

SIM CARD-களுக்கு Expiry Date இல்லையென்றாலும், 90 நாட்களுக்கு மேல் நீங்கள் அதை பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலிழந்து போகலாம். அதோடு, தண்ணீரில் விழுந்தாலோ, அடிக்கடி கழற்றி மாட்டும்போதோ SIM CARD சேதமடையலாம். இதனால் நெட்வொர்க் இணைப்பு பிரச்னைகள் ஏற்படும். எனவே, இத்தகைய பிரச்னைகளை சந்தித்தால் மட்டும், பயனர்கள் அவர்களது தொலைபேசி சேவை வழங்குனரை அணுகி, SIM CARD-ஐ மாற்றலாம். SHARE.
Similar News
News September 29, 2025
ஆசிய கோப்பையில் சொதப்பிய சுப்மன் கில்

ஆசிய கோப்பையில் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த தொடரில் அவர் ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. நேற்றைய போட்டியிலும் 12 ரன்னுக்கு அவுட்டான அவர், ஒட்டுமொத்தமாக 7 இன்னிங்ஸில் 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஓபனிங் ஸ்லாட்-ஐ விட்டுக்கொடுத்த சஞ்சு சாம்சன் 4 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் உள்பட 132 ரன்கள் அடித்துள்ளார். இனி ஓபனிங் இறங்கவேண்டியது யார்?
News September 29, 2025
EPS சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

இன்று, நாளை மற்றும் அக்.4-ம் தேதி தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் EPS மேற்கொள்ளவிருந்த ‘மக்களைக்_காப்போம் தமிழகத்தை_மீட்போம்’ பரப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளியாகவில்லை. அக்.2 தருமபுரியின் பாப்பிரெட்டிபட்டி, அரூரிலும், அக் 3 பாலக்கோடு, பென்னாகரத்திலும், அக்.6 நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரிலும் இபிஎஸ் பரப்புரை செய்வார் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
News September 29, 2025
BREAKING: விஜய்க்கு பின்னடைவு

<<17862356>>தவெக <<>>மனுவை அவசர வழக்காக உடனே ஏற்க முடியாது என HC மதுரை கிளை பதிவாளர் மறுத்துவிட்டார். தவெக சார்பில் அளிக்கப்படும் மனு நாளை ஏற்கப்பட்டு, வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே, மக்களை நேரில் விஜய் சந்திக்காதது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில், HC-ம் இவ்வாறு கூறிவிட்டதால், வெள்ளிக்கிழமை வரை அவர் கரூர் செல்ல வாய்ப்பில்லை. இது விஜய் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.