News August 30, 2024
காலையில் இந்த இரண்டை மட்டும் செய்து பாருங்க..!

ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அன்றைய காலை வேளையே தீர்மானிக்கிறது. காலை வேளையை சூப்பராக மாற்ற இதோ சில டிப்ஸ்கள்: எழுந்ததும் முதல் வேலையாக படுக்கைகளை மடித்து வையுங்கள்; இது சோம்பலை போக்கும். பின்னர் பல் துலக்காமல் ஒரு லிட்டர் தண்ணீரை குடியுங்கள். இதனால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று மந்தத்தன்மையை எடுக்கும். பிறகு உங்கள் ரெகுலரான வேலையை ஆரம்பித்துவிடுங்கள்.
Similar News
News August 20, 2025
நாளை இதை செய்ய மறக்காதீங்க

நாளை (வியாழக்கிழமை) குரு புஷ்ய யோக தினமாகும். குருவுக்குரிய வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் எப்போது இணைகிறதோ அந்த நாளே குரு புஷ்ய யோக நாள். அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் பல்கிப் பெருகும் என்ற நம்பிக்கை எவ்வாறு உள்ளதோ, அதைவிட சிறந்த நாளாக குரு புஷ்ய யோக நாளை கருதுகின்றனர். இந்த நாளில் மஞ்சள் நிற பொருள்கள் வாங்குவதை மறக்காதீங்க.
News August 20, 2025
இன்ஃபோசிஸ் அறிவித்த 80% போனஸ்.. யாருக்கு கிடைக்கும்?

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. PL – Performance Level 6 மற்றும் அதற்கு கிழே உள்ள இளநிலை, மத்திய நிலை ஊழியர்களுக்கு சராசரியாக 80% போனஸ் வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கை வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 8.7% அதிகரித்து ₹6,921 கோடியாகவும், வருவாய் 7.5% அதிகரித்து ₹42,279 கோடியாகவும் உயர்ந்துள்ளன.
News August 20, 2025
பேச்சுவார்த்தைக்கு முன்வந்த ரஷ்யா

உக்ரைனுடன் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. அரசியல், ராணுவம், மனிதநேய நடவடிக்கைகள் குறித்து பேச தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. டிரம்ப் – புடின், டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்புகளுக்கு பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா – உக்ரைன் 3 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.