News September 8, 2025
ஏடிஎம் PIN நம்பராக இதனை வைக்க வேண்டாம்!

ஏடிஎம் PIN நம்பரை யூகிக்க முடியாத வகையில் வைப்பது அவசியம். 1234, 4321, 1111, 2222 போன்றவற்றை ஹேக்கர்களால் ஈசியாக கண்டறிய முடியும். உங்கள் பிறந்த தேதி, செல்போன் எண்ணின் கடைசி 4 நம்பர், வண்டி நம்பர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். இதனை நினைவில் வைப்பது எளிது என்றாலும், இதுபோன்ற எண்களை ஈசியாக திருடலாம். உங்களுக்கு தொடர்பில்லாத சீரற்ற நம்பரை (e.g. 4681, 9573) பயன்படுத்துவது நல்லது. SHARE IT.
Similar News
News September 9, 2025
ஆஸி., வாழ் இந்தியர்களை சுற்றும் சர்ச்சை

ஆஸ்திரேலிய ஆளுங்கட்சிக்கு வாக்களிக்கவே, இந்தியர்கள் அதிகளவு குடியேற்றப்படுவதாக அந்நாட்டு செனட்டர் ஜசிந்தா கூறியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்து இந்திய சமூகத்தை காயப்படுத்தியுள்ளதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு PM அந்தோனி அல்பனீஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சமீபத்தில், இந்திய குடியேற்றத்தை எதிர்த்து அந்நாடு முழுவதும் மெகா பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
கோடிகளை அள்ளும் CSK வீரர் பிரெவிஸ்

தென்னாப்பிரிக்க வீரர் பிரெவிஸுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், SA20 சீசன் 4 ஏலத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அவரை ₹8.30 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த லீக்கில் இதுதான் உச்சபட்ச தொகையாகும். CSK அணிக்காக விளையாடும் இவரை பேபி ABD என்று அழைக்கின்றனர். மற்றொரு வீரரான மார்க்கரமை டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் ₹7 கோடிக்கு வாங்கியுள்ளது.
News September 9, 2025
2029-ல் ராகுல் காந்தி தான் PM: டி.கே.சிவக்குமார் உறுதி

2029-ல் ராகுல் காந்தி கண்டிப்பாக பிரதமர் ஆவார் என கர்நாடகா DCM டி.கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம் நாட்டிற்கு ஒரு மாற்றம் வேண்டும் எனவும், நமது அண்டை நாடுகள் எல்லாம் எதிரிகள் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுலை முதன்முதலாக CM ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். சமீபத்தில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், 2029-ல் ராகுல் PM ஆவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.