News May 14, 2024
சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பயன்படுத்த தடை

வடகொரிய நாட்டில் பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. லிப்-ஸ்டிக் என்பது மேற்கத்திய நாட்டின் தாக்கம் என்றும், சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பெண்களை கவர்ச்சியாக காட்டுகிறது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன. ஏற்கெனவே அந்நாட்டில் ஜீன்ஸ் பேண்ட் அணிய தடை உள்ளது.
Similar News
News March 13, 2026
வந்தாச்சு ‘டிசைனர் அரிசி’.. நீரிழிவு பிரச்னைக்கு தீர்வா?

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அரிசியை தவிர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்காகவே புது ‘டிசைனர் அரிசி’யை உருவாக்கி இருப்பதாக CSIR-NIIST விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதில் சாதாரண அரிசியை(6-8%) விட புரதச்சத்து(20%) அதிகமாம். மேலும், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 இருப்பதால் ரத்த சோகை பாதிப்பையும் தவிர்க்கலாம் என தெரிவிக்கின்றனர். SHARE IT.
News March 13, 2026
பரபரப்பு ட்விஸ்ட்: திமுக கூட்டணியில் இணைந்தார்

OPS திமுகவில் இணைந்ததை கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி, இன்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுக பிளவுக்கு பிறகு OPS அணியில் இருந்த அவர், ‘புரட்சி அதிமுக’ என்ற கட்சியை தொடங்கினார். சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்ததால், தவெக கூட்டணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
News March 13, 2026
CSK மீது புகார் அளித்துள்ள SUN Network!

தோனியை ரஜினியுடன் ஒப்பிட்டு மாஸாக CSK வெளியிட்டு வரும் விளம்பரங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், CSK-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது சன் டிவி நெட்வொர்க். இனி CSK விளம்பரங்களில் ஜெயிலர், கூலி பட பாடல்களை உபயோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சன் டிவி நெட்வொர்க் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேள SRH-க்கு யூஸ் பண்ண போறாங்களோ?


