News December 6, 2024
வடிவேலுவுக்கு எதிராக பேசக் கூடாது

நடிகர் சிங்கமுத்து வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தையும் பேசக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னைப் பற்றி சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேசுவதாகவும் அவர் ₹5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வடிவேலு மனு அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வடிவேலு பற்றி கருத்து கூறக்கூடாது என்று சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
UNESCO தலைமையகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு

இந்திய அரசியலமைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பாரிஸில் உள்ள UNESCO தலைமையகத்தில் டாக்டர் அம்பேத்கரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்று PM மோடி நெகிழ்ந்துள்ளார். அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும், மக்களுக்கு வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன என்றும் அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News November 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 532 ▶குறள்: பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. ▶பொருள்: நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.
News November 27, 2025
Cinema Roundup: தீபிகாவிற்கு ₹12 கோடி நஷ்டம்

*தனுஷின் ‘தேரே இஸ்க் மெயின்’ படம் ப்ரீபுக்கிங்கில் ₹3.8 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *சீரியல்களில் நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள், சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம். *தெலுங்கில் ‘MAD’ படத்தை இயக்கிய கல்யாண் சங்கர் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல். *தீபிகா படுகோனின் 82°E என்ற சரும பராமரிப்பு பிராண்ட் 2024-25 நிதியாண்டில் ₹12.26 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.


