News August 28, 2024
தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்

‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என மத்திய அரசு கூறுகிறது. மும்மொழிக் கொள்கையை நாங்கள் எப்படி ஏற்போம்? தமிழகத்தில் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைத்து, தேன்கூட்டில் கை வைத்து விடாதீர்கள்” என எச்சரித்தார்.
Similar News
News August 17, 2025
லியோவின் சாதனையை மீண்டும் முறியடித்த கூலி

பாக்ஸ் ஆஃபிஸில் ரஜினி-விஜய் ரசிகர்களுக்குள் இருக்கும் COLD WAR பற்றி அனைவரும் அறிந்ததே. இதனால் சமீபத்தில் வெளியான ’கூலி’ படத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். ஆனால் கூலியோ விஜய்யின் லியோ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அதாவது, 5 நாள்களில் ₹300 கோடி ஈட்டிய லியோவின் சாதனையை வெறும் 3 நாள்களில் (சுமார் ₹324 கோடி) கூலி படம் முறியடித்துள்ளது.
News August 17, 2025
அன்புமணியின் பொதுக்குழு தான் செல்லும்: K.பாலு

PMK-வில், கடந்த 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த கூட்டம் தான் செல்லும் என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் K.பாலு தெரிவித்துள்ளார். மேலும், விழுப்புரத்தில் இன்று ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 37 தீர்மானங்கள் செல்லாது எனவும், அந்தத் தீர்மானங்கள் தங்களை கட்டுப்படுத்தாது எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியில், தந்தை – மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
News August 17, 2025
படம் எடுக்கலாமா?… ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள் ஆக.20-ல் தொடங்கவுள்ளது. இதில், ‘ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்’ என்ற 3 நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், ‘மரங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் 1 நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. மார்க் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நீங்க ரெடியா..!