News April 24, 2024
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ்மில்க் கொடுக்காதீங்க

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி, சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், *தொண்டை வலி, சளி பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், ரோஸ் மில்க் கொடுக்க வேண்டாம் *உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் *ஓஆர்எஸ், இளநீர், மோர் அதிகம் குடிக்கவும். *மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
‘அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார் CM ஸ்டாலின்’

<<18692998>>நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள்<<>> சிலரை போலீசார் கொடூரமாக தாக்கியது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது கோரிக்கையை ஆதரித்த CM ஸ்டாலின், அதிகாரம் கிடைத்ததும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக விமர்சித்துள்ளார். அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை முடக்க முடியாது என்று கூறிய அவர், ஆசிரியர்களை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News January 2, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசத்தை TN அரசு நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஜன.6 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <
News January 2, 2026
தவெகவில் இணைந்தார் அதிமுக Ex MLA ஜேசிடி பிரபாகர்

தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். அண்மையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இப்போது, ஜேசிடி பிரபாகரும் தவெக பக்கம் திரும்பி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


