News April 25, 2025
வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடாதீர்கள்

வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில பழங்களால் வயிற்று தொடர்பான நோய்கள் வரக்கூடும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது உடலின் செரிமான அமைப்பை சேதப்படுத்தலாம். அதேபோல, வாழைப்பழம் சாப்பிட்டால், ரத்தத்தின் சமநிலை பாதிக்கப்படும். கொய்யா, மாதுளை போன்ற பழங்களை ஜீரணிப்பது கடினம் என்பதால், வயிற்று வலி வரலாம்.
Similar News
News November 27, 2025
KAS மனவருத்தத்தில் இருந்தார்: TTV தினகரன்

அதிமுகவில் இருந்து நீக்கியதில் இருந்தே செங்கோட்டையன் மனவருத்தத்தில் இருந்ததாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் செங்கோட்டையனை கொங்கு நாட்டு தங்கம் என்றுதான் சொல்வார்கள் என கூறிய TTV, கட்சியில் பம்பரம்போல் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், செங்கோட்டையன் விஜய் பக்கம் செல்வது யாருக்கு பின்னடைவு என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் EPS-ஐ மறைமுகமாக சாடினார்.
News November 27, 2025
சபரிமலை அன்னதானத்தில் மெனு மாற்றம்

நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அறிவித்துள்ளது. இதன்படி, வழக்கமான கஞ்சி, சாதாரண சாப்பாட்டுக்கு பதில், பாயசம், அப்பளத்துடன் உணவு வழங்கப்படும். இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
News November 27, 2025
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் சிவகாசி மாநகர தொழிலாளர் பிரிவு அமைப்பாளர் L.நாகராஜன், KT ராஜேந்திர பாலாஜி முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், பட்டாசு தொழிலதிபர் சந்தனபாண்டியன் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். 2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்தது.


