News May 16, 2024
பதவியை மட்டும் அனுபவிக்க ஆசைப்பட கூடாது

காங்கிரஸ் கட்சி தொகுதிகளை அடுத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 1967க்கு பிறகு 57 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வளராமல் அதே இடத்தில் உள்ளதாக கூறிய அவர், இந்த நிலை மாறி விரைவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலைக்கு கட்சியை வளர்க்க வேண்டும் என்றார். பதவியை அனுபவித்த பலர் கட்சிக்காக உழைக்காமல் ஓய்வெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News August 8, 2025
தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

லோக் சபா இன்று கூடியதும் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அனுமதி கிடைக்காததால் அவர்கள் அமளியில் ஈடுபட, 3 மணி வரை லோக் சபா ஒத்திவைக்கப்பட்டது.. இதேபோல் ராஜ்யசாபாவிலும் கடும் அமளி ஏற்பட ஆக.11-ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மட்டுமே இதுவரை முறையாக விவாதிக்கப்பட்டது.
News August 8, 2025
RR அணிக்கு கேப்டனாகும் துருவ் ஜூரேல்?

துலீப் டிராபி தொடரில் Central Zone அணிக்கு துருவ் ஜுரேல் கேப்டனாக நியமிக்கப்பட்டதை அடுத்து RR அணி நிர்வாகம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் ஜுரேல் என்ற வாசகத்துடன் ‘ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து ஒருவர் வழிநடத்துவார்’ என கேப்ஷன் இடம்பெற்றுள்ளது. சஞ்சு சாம்சன் அணி மாறுகிறார் என தகவல் வெளிவரும் சூழலில், அடுத்த ஆண்டு RR அணிக்கு இவர்தான் கேப்டனா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News August 8, 2025
‘SIR’ குறித்து EPS வாய் திறக்காதது ஏன்? துரைமுருகன்

தமிழக மக்களை டெல்லியிடம் அடமானம் வைக்க EPS துணிந்துவிட்டதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது போல் TN-ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) மூலம் மத்திய அரசு, அரசியல் உரிமையை பறிக்க முயல்வதாக துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக EPS இதுவரை வாய் திறக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.