News May 5, 2024
11 முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம்

கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொது மக்கள் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பகல் 11 மணி முதல் 3 மணி வரை மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் அருந்த வேண்டும், வெளியே குடை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 22, 2025
ஒரு ஊரில் ஒருவர் மட்டும் வசிக்கும் விநோதம்

ஒரு ஊரில் ஒரே ஒருவர் அரசராகவும், மக்களாகவும் இருப்பதை கேட்கும் போது உங்களுக்கு விநோதமாக தோன்றலாம். ஆனால், US-ல் உள்ள மொனொவி என்ற இடத்தில் எல்சி எய்லர் (89) என்ற ஒரு பெண் மட்டுமே வசிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மேயர் தேர்தலில் அவரே போட்டியிட்டு, அவருக்கு அவரே ஓட்டு போட்டு மேயராகிறார். தன்னுடைய வரியையும் வசூல் செய்து, தன்னுடைய ஹோட்டலுக்கு தானே லைசென்ஸும் கொடுக்கிறார்.
News December 22, 2025
மே.வங்க CM-க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய TMC எம்எல்ஏ!

மம்தா பானர்ஜியின் TMC கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட MLA ஹுமாயுன் கபீர், ஜனதா உன்னயன் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மம்தாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே தனது லட்சியம் என கூறிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 8 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாபர் மசூதியை போல் ஒரு மசூதி கட்டப்போவதாக அறிவித்து, அதற்கு அடிக்கல் நாட்டியதால், அவர் TMC-ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
News December 22, 2025
கையை கடிக்கும் செல்போன் ரீசார்ஜ்!

நமது 6-வது விரலாகவே செல்போன் மாறிவிட்டது. 4-6 பேர் கொண்ட குடும்பத்தில், செல்போன், Internet-க்கு சராசரியாக மாதம் ₹2000 வரை செலவாகிறது. நெட் பயன்படுத்தாத சில கிராமப்புற மக்கள் கூட மாதந்தோறும் மினிமம் ரீசார்ஜ் (₹200-₹300) செய்ய வேண்டியுள்ளது. அப்போதுதான் BANK, GAS உள்ளிட்ட OTP வரும். ₹30,000 சம்பாதிக்கும் குடும்பத்தில் 6% வரை இதற்கே செலவாகிறதாம். நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க?


