News August 18, 2024
அந்த நேரத்தில் மட்டும் ராக்கி கட்டாதீர்கள்

இலங்கையை ஆண்ட தமிழ்ப்பேரரசர் ராவணனுக்கு அவனது தங்கை சூர்ப்பனகை மங்கள கயிறு கட்டி (ராக்கி), வணங்கிய நாளே ரக்ஷாபந்தன் எனக் கொண்டாப்படுகிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பிணைப்பின் சின்னமான அவ்விழா நாளை (ஆக. 19) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், ராமனால் ராவணன் கொல்லப்பட்ட பத்ரர் காலத்தில், (10:53 AM – 12:37 PM) ராக்கி கட்டக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. >SHARE IT
Similar News
News August 14, 2025
கவர்னர் எனும் நச்சுப் பாம்பு மூலம் குடைச்சல்: KN நேரு

BJP, தங்களுக்கு வேண்டாத மாநிலங்களில் கவர்னர் எனும் நச்சு பாம்பை அனுப்பி குடைச்சல் கொடுப்பதாக அமைச்சர் KN நேரு சாடியுள்ளார். மேலும், TN-க்கு RSS அனுப்பி வைத்த கைக்கூலி RN ரவி என கடுமையாக விமர்சனம் செய்துள்ள அவர், அவமானங்களை மட்டுமல்ல தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை எனவும் விமர்சித்துள்ளார். TN அரசு குறித்த RN ரவியின் அறிக்கையை படித்தால் அமித்ஷாவே சிரிப்பார் எனவும் கூறியுள்ளார்.
News August 14, 2025
உங்களுக்கு high BP இருக்கா? இதை தவிருங்கள்

உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு (high BP) உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: காஃபி -இதிலுள்ள கஃபைன் BP-யை அதிகரிக்கும் *சர்க்கரை -உடல்பருமன், BP-யை அதிகரிக்கும் *பதப்படுத்தப்பட்ட இறைச்சி – இதில் உப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் BP உயரும் *பீநட் பட்டர் – இது கொழுப்பை அதிகரித்து BP-யை உயர்த்தும் *மைதா பிரெட் *உப்பு – அதிகமானால், BP உயரும். ஆக, தினசரி 3 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம்.
News August 14, 2025
ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க முடிவு?

டிரம்ப் – புடின் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் அதிக தள்ளுபடியில் விற்கப்படுகிறது. இதனால், டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியிலும், ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தள்ளுபடி குறைந்ததால் எண்ணெய் வாங்குவதை பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த மாதம் நிறுத்தி இருந்தன.