News April 12, 2025
CSK பிளேஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா?

சென்னை அணியின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் மிக ஏமாற்றமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த CSK, பிளேஆஃப் செல்ல இப்போதும் வாய்ப்புள்ளது. மீதமுள்ள 8 போட்டிகளில் 7ல் CSK வெற்றி கண்டால் அது சாத்தியம். ஆனால் அந்த அணியின் பேட்டிங்கை பார்த்தால் அதற்கு ‘வாப்பில்லை ராஜா’ என்றே சொல்ல தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News November 24, 2025
NDA கூட்டணியில் புதிய கட்சி.. அறிவித்தார் அண்ணாமலை

வடமாவட்டங்களில் செல்வாக்கை காண்பிக்க, பிரிந்து நிற்கும் பாமகவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக – பாமக இடையே நல்ல நட்பு உள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, இனி அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்றும் கூட்டணியை சூசகமாக தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் களத்தில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
News November 24, 2025
UAN-ல் இருந்து தவறான ஐடியை நீக்க இதை செய்யுங்கள்

*Unified Member போர்ட்டலுக்குள் சென்று, உங்கள் UAN விவரங்களை உள்ளிடுங்கள்.
*Views ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
*அதில் service history-ஐ ஓபன் செய்து, அதில் தவறான member ID-ஐ கிளிக் செய்யுங்கள்.
*பின்னர் அதனை delink கொடுங்கள்.
*அதற்கான காரணத்தை உள்ளிட்டால், மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு நீக்கிவிடலாம்.
*உங்கள் நிறுவனம் தவறான ECR-ஐ பதிவுசெய்திருந்தால், error என மெசேஜ் வரும்.
News November 24, 2025
MGR-க்கு ஜெயலலிதா துரோகம் செய்தார்: அமைச்சர் நாசர்

வாழையடி வாழையாக வரும் துரோகத்தின் உச்சக்கட்டமே அதிமுக என்று அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார். கருணாநிதிக்கு துரோகம் செய்தவர் MGR என்ற அவர், MGR-க்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா என கூறினார். ஜெ.,க்கு சசிகலாவும், சசிகலாவுக்கு EPS-ம் துரோகம் செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார். தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் அதிமுகவினர், அவர்களது கட்சியை வளர்த்தெடுத்தவர்களை விட்டுவிடுகின்றனர் என்றார்.


