News March 4, 2025
விஜய்யை விமர்சிக்க திமுகவில் திடீர் தடை: இதுவா காரணம்?

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை DMK தற்போதே தொடங்கிவிட்டது. அந்தவகையில், அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய்யைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாமென அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரித்தபோது, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து அரசியலில் முக்கியத்துவம் பெற வைத்தது போன்ற நிலையை, விஜய்க்கும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக DMK வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News October 25, 2025
ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் பொன்மொழிகள்

*மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, மனதை மாற்ற முடியாதவர்களால் எதையும் மாற்ற முடியாது. *இதைச் செய்யவே முடியாது என்று கூறும் நபர்கள் அதைச் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. *சரியான வாய்ப்புக்காக காத்திருக்காதீர்கள், அதை உருவாக்குங்கள். *உங்கள் சோகமான தருணங்களை மணலில் எழுதுங்கள், உங்கள் நல்ல தருணங்களை கல்லில் எழுதுங்கள். *கற்பனையே படைப்பின் ஆரம்பமாகும்.
News October 25, 2025
காயம் ஏற்பட்டால் இதை செய்யக்கூடாது!

பொதுவாக தீ உள்பட எந்த காயமாக இருந்தாலும் முதலில் பலர் தேங்காய் எண்ணெய்யை அப்ளை செய்வது வழக்கம். ஆனால் அது தவறான வழிமுறையாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் காயத்தை ஆற்றாமல், அதன் ஹீலிங் பண்பை தடுத்து நிறுத்தி விடுமாம். எனவே காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் அதை கழுவி, அந்த இடத்தில் ஆன்ட்டி செப்டிக் கிரீம்கள் அப்ளை செய்வது போதுமானதாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT
News October 25, 2025
PHOTOS: அஜித் நெஞ்சில் கடவுள் டாட்டூ

கார் ரேஸில் தீவிரமாக உள்ள அஜித் இப்போது இந்தியா திரும்பியுள்ளார். விரையில் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதனிடையே கேரளா பாலக்காட்டில் உள்ள கோவிலுக்கு அஜித் சென்ற போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. முக்கியமாக அதில் அஜித் நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூ கவனம் பெற்றுள்ளது. தனது குல தெய்வமான பகவதி அம்மனை டாட்டூவாக அஜித் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


