News September 19, 2025
கோவையை கண்ட்ரோலில் எடுக்க திமுக போடும் ஸ்கெட்ச்

கோவையில் அதிமுக-பாஜகவுக்கான மவுசு கூடியிருப்பதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அறிவாலயத்தை அலறச் செய்திருக்கிறதாம். இதனால் கோவை கிங் என கருதப்படும் செந்தில் பாலாஜியை வரும் தேர்தலில் கோவையில் களமிறக்கவும், கடந்த சட்டமன்றத்தேர்தலில் கரூரை கண்ட்ரோலில் வைத்திருந்த SB-யின் சகோதரர் அசோக்கை அங்கு நிறுத்தவும் தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News September 19, 2025
ஆயுதபூஜை விடுமுறை.. செப்.22 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே செப்.22, 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE.
News September 19, 2025
ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரோபோ சங்கர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ‘அம்பி’ படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ளார். டப்பிங் கலைஞர், பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர் உள்ளிட்டவற்றின் மூலம் அவருக்கு சுமார் ₹5 – ₹6 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக ‘ஏசியாநெட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ரோபோ சங்கரை போலவே அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
News September 19, 2025
Sports Roundup: தமிழ் தலைவாஸ் அணியில் அருளானந்த பாபு

*சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி. *புரோ கபடி லீக்கில் இன்று தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் மோதல். *உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம். * தமிழ் தலைவாஸ் அணியில் அருளானந்த பாபு இணைந்துள்ளார். * ஃபிஃபா தரவரிசையில் ஒரு இடம் சறுக்கி இந்தியா 134-வது இடம் பிடித்துள்ளது.