News March 21, 2025
கடன் வாங்கியதில் திமுக சாதனை: இபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்த 4 வருடங்களில் ₹4.53 லட்சம் கோடி பெற்றுள்ளது. ஆனால், அதிக கடன் வாங்கியதை மறைத்து சதவீத கணக்கு காட்டி தங்கம் தென்னரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். நிதியமைச்சர் பட்ஜெட் பதிலுரையில் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே இருந்ததாக விமர்சித்த அவர், நிதி மேலாண்மை குழு அமைத்து கடன் வாங்கியது தான் திமுகவின் சாதனை என்று சாடினார்.
Similar News
News March 28, 2025
சு.வெங்கடேசனுக்கு ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் <<15911227>>தந்தை<<>>மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இச்செய்தியைக் கேட்டவுடன் வருத்தமடைந்ததாக x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 28, 2025
பிரபல குரல் நடிகை காலமானார்

‘டிராகன் பால்’ சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஜப்பானிய குரல் நடிகை யோகோ கவனாமி(67) காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று காலமானார். ‘டிராகன் பால்’ படத்தில் ரான்ஃபான் கேரக்டரில் குரல் நடிப்பை வழங்கி பிரபலமான இவர் God Mars, Armored Trooper Votoms, Transformers: The Headmasters உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 28, 2025
சக்திவாய்ந்தவர்கள் பட்டியல்: மோடி முதலிடம்; ஸ்டாலின்?

இந்தியாவில் டாப் 100 சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இன்று வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அமித் ஷா, ஜெய்சங்கர், மோகன் பாகவத் உள்ளனர். இப்பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 23வது இடம் கிடைத்துள்ளது. ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு 14வது இடத்தை பிடித்துள்ளார். ரோஹித் ஷர்மா 48வது இடத்தில் உள்ளார்.