News August 18, 2025
அதிமுகவுக்கு செக் வைக்க திமுக புது முயற்சி?

திமுக வெற்றியை தடுக்க அதன் கூட்டணி கட்சிகளை வளைப்பதில் அதிமுக ஆர்வம் காட்டுவது போல், திமுகவும் ஒரு புது யுத்தியை கையில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக தலைமை மீது செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, ஆர்.காமராஜ், மணிகண்டன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை திமுகவுக்கு கொண்டு வர நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
Similar News
News March 13, 2026
9-வது வயதில் செஸ்ஸில் நம்பர் 1

தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சதுரங்க சாம்பியன் தமிழமுதன், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மேலும், 2000 Elo ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த உலகின் மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் அவர் படைத்துள்ளார். தன்னுடைய 4-ம் வயதில் உறவினர்கள் மூலம் செஸ் கற்றுக்கொண்ட தமிழமுதன், தொடர் பயிற்சியால் சிறந்த செஸ் வீரராக உருவெடுத்துள்ளார்.
News March 13, 2026
நல்லவங்க எல்லாம் கோபப்படாம இருக்கீங்க… கமல்

பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது என கமல் தெரிவித்துள்ளார். மகாநதி படத்தில் வரும் ‘நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது’ என்ற வரிகளை சுட்டிக்காட்டி அந்த கோபம் என்னுள் இன்னும் தீரவில்லை எனவும் SM-ல் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடி <<19360739>>பாலியல் வன்கொடுமை<<>> வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
News March 13, 2026
மோனாலிசா திருமணம் லவ் ஜிகாத்தா?

கும்பமேளாவில் பிரபலமான<<19356967>>மோனாலிசா <<>>தனது காதலரான ஃபர்மான் கானை கேரளாவில் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கேரளா போலீஸ் உதவியுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த கல்யாணம் லவ் ஜிகாத்தா என செய்தியாளர்கள் மோனாலிசாவிடம் கேட்டனர். அதற்கு, இருவரும் மதம் மாறவில்லை என்றும், இது லவ் ஜிகாத் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


