News August 6, 2025
முதலீடுகளை ஈர்த்ததாக திமுக பொய் பிரச்சாரம்: L.முருகன்

முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக திமுக அரசு போலி விளம்பர பிரச்சாரம் செய்து வருகிறதாக மத்திய இணை அமைச்சர் L.முருகன் கண்டனம் குற்றம் சாட்டியுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் எந்தப் பயனும் இல்லை என தெரிவித்த அவர், கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகளாலும் பயனில்லை என சாடினார்.
Similar News
News March 3, 2026
திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா? இன்று இறுதி முடிவு

ராஜ்யசபா பதவி எல்லாம் தேவையில்லை 2016 -ல் தங்களுக்கு கொடுத்த 41 இடங்களை இந்த தேர்தலிலும் கொடுங்கள் என்று காங்., பேச்சுவார்த்தை குழு, திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால், திமுக கூட்டணியில் காங்., தொடருமா அல்லது விலகுமா என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்,கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருவதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
பாஜகவுக்கு DCM பதவியா? நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் உள்பட முருகனின் அறுபடை வீடுகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நயினார், கூட்டணிப் பங்கீடு பற்றி இன்னும் பேச தொடங்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அதிமுக கூட்டணியில் பாஜக DCM பதவி கேட்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே ஒரே இலக்கு என அவர் பதிலளித்துள்ளார்.
News March 3, 2026
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

திமுகவில் OPS இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் பலர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், OPS-ன் வலது கை போல் செயல்பட்டு வந்த மார்க்கையன்கோட்டை முன்னாள் சேர்மன் அகிலன், பெரியகுளம் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும், தங்களின் வீடுகளில் இருந்த OPS புகைப்படத்தை அகற்றிவிட்டு, EPS-ன் புகைப்படத்தையும் வைத்துள்ளனர்.


