News January 11, 2025
திமுக இரட்டை வேடம்: இபிஎஸ்

நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ரத்து செய்வோம் என ஸ்டாலினும், உதயநிதியும் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை ரத்து செய்ய செய்யவில்லை. எப்போது ரத்து செய்யப்படும் என்பது குறித்து முதல்வர் உரிய விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News January 25, 2026
சிவகங்கை: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News January 25, 2026
பள்ளிகளில் ‘அயலி’ திரைப்படம்

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘அயலி’ வெப் சீரிஸை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், ஜனவரியில் அயலி திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2023-ல் வெளியான அயலி சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
News January 25, 2026
போலீஸ், பஸ் கண்டக்டர் விசில் வைத்திருக்க முடியாது: KAS

TN-ல் எங்கு பார்த்தாலும் விசில் சத்தம் ஒலிப்பதாக செங்கோட்டையன்(KAS) தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இனிவரும் நாள்களில் போலீஸ், பஸ் கண்டக்டர்கள் விசில் வைத்திருக்க தடை வரலாம் எனவும் தெரிவித்தார். மேலும், திமுகவை ஒழிப்பதாக கூறிவிட்டு நபர் ஒருவருக்கு ₹1,000 கொடுத்து சில நாள்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தை நடத்தியதாக NDA கூட்டத்தை சாடினார்.


