News May 26, 2024
அதிமுக உடையக் கூடாது என்பதே திமுகவின் விருப்பம்

அதிமுகவுக்கு செங்கோட்டையன் பொதுச் செயலாளராக போவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து வார பத்திரிகைக்கு தற்போது விளக்கமளித்து பேட்டியளித்துள்ளார். அதில், திராவிட கட்சிகளால்தான் தமிழகம் முன்னேறியிருப்பதாகவும், அதனால், அதிமுக உடையாமல் இருந்தால்தான் வலிமையான போட்டியாளராக இருக்க முடியும், அதுதான் திமுகவுக்கு உற்சாகம் தருமென்று கூறியுள்ளார்.
Similar News
News March 3, 2026
ஈரான் அரசு என்னை கொன்னுடும்.. பயத்தில் நடிகை!

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் அரசாங்கம் தன்னை கொன்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கமேனி மரணமடைந்ததை கொண்டாடிய அவர், அந்நாட்டின் அரசு கவிழும் வரை அங்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். ஈரானில் பிறந்த நோரூசி, 8 வயதில் வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் வசித்து வரும் அவர், ‘Sacred Games’ உள்பட பல இந்திய மொழி படங்கள், வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
News March 3, 2026
கேவலம்: சஞ்சுவுக்கு எதிராக இனவெறி கருத்து!

WI அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய அணியை சஞ்சு சாம்சன் கரைசேர்த்தார். அவரை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வரும் நிலையில், X தளத்தில், கருப்பானவரால் தான், கருப்பினத்தவர்களை வீழ்த்த முடியும் என மிகவும் கேவலமான ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்திய ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக கண்டித்த நிலையில், அப்பதிவு தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது. இவர்களையெல்லாம் என்ன செய்வது?
News March 3, 2026
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

மூத்த காங்., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.பி. உன்னிகிருஷ்ணன் (90) காலமானார். கோழிக்கோடு வடகரா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை (1971-1996) MP-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வி.பி.சிங் அமைச்சரவையில் (1989-90) மத்திய தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராகப் பணியாற்றினார். வளைகுடா போரின்போது இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றியவர்.


