News March 27, 2025

திமுகவின் தேசிங்குராஜன் மறைவு: CM ஸ்டாலின் இரங்கல்

image

திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும், மூத்த நிர்வாகியுமான தேசிங்குராஜன் காலமானார். அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தருமபுரி மேற்கு மாவட்ட மூத்த கழக முன்னோடிகளில் ஒருவரான தேசிங்குராஜன் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார். #RIP

Similar News

News November 28, 2025

ராணிப்பேட்டை :புயல் அவசர உதவி எண்கள் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டித்தா புயலை முன்னிட்டு போலீசார் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளனர். இன்று 28 நவம்பர் 2025, மழைக்காலத்தில் ஏதும் அவசர நிலை ஏற்பட்டால் 9884098100, 04172-270112 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், வாட்ஸ் அப்பில் 9677923100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தகவல் வழங்கி உதவி பெறலாம்.

News November 28, 2025

நாளை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

டிட்வா புயல் எதிரொலியாக நாளை (நவ.28) நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ம் தேதி கார்த்திகை மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறையாகும்.

News November 28, 2025

கசப்பு தான், ஆனாலும் இது அவ்வளவு நல்லது!

image

பாகற்காய் கசப்பாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பாகற்காய் ஜூஸை வாரத்திற்கு இருமுறை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். *உடலின் ஆற்றலை மேம்படுத்தும் *வலிமையை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் *செரிமானத்திற்கு நல்லது *மலச்சிக்கல் சரியாகும் *வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். *ஆஸ்துமாவை தடுக்க உதவும்.

error: Content is protected !!