News October 26, 2025
திமுகவின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டது: நயினார்

உங்களுடன் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று மட்டும் சொல்லும் திமுக, மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அரியலூரில் பரப்புரை செய்த அவர், ஸ்டாலின் ஆட்சியின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
ஹாலிவுட் நடிகை ஜூன் லாக்ஹார்ட் காலமானார்

Lassie, Lost in Space தொடர்களில் ‘அம்மா’-வாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமான, பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஜூன் லாக்ஹார்ட்(100) காலமானார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக திரை வாழ்வில் ஜொலித்து வந்தார். 1930, 1940-களில் வந்த ‘எ கிறிஸ்மஸ் கரோல்’, ‘மீட் மீ இன் செயின்ட் லூயிஸ்’ படங்கள் அவருக்கு புதிய உச்சத்தை தேடித்தந்தன. உலகம் முழுவதும் பலரும் ஜூன் லாக்ஹார்ட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News October 26, 2025
தண்ணீர் மாநாடு நடத்துகிறார் சீமான்

தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க, நாதக சார்பில் தண்ணீர் மாநாடு நடத்தப்பட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். ஆடு, மாடுகள் மாநாடு, கடல் மாநாடு, மரங்களின் மாநாடு, மலைகள் மாநாடு என புதுவிதமான மாநாடுகளை சீமான் முன்னெடுத்தார். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை, காவிரி நதிநீர் சிக்கல், நன்னீர் பாதுகாப்பு, நீர்வள பிரச்னைகள் குறித்து விவாதிக்க நவ.15-ல் தண்ணீர் மாநாடு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
புயல் எச்சரிக்கை: CM ஸ்டாலின் ஆய்வு

பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை CM ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, அடையாறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில் CM இன்று மீண்டும் ஆய்வு செய்தார். கடந்த அக்.24-ம் தேதியும் இங்கு ஆய்வு செய்திருந்த நிலையில், தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் உபரி நீர் அடையாறு வழியாக தான் சென்று கடலில் கலக்கிறது.


