News February 9, 2025
திமுக தொடர்ந்து 11 தேர்தல்களில் வெற்றி!

திமுக 2019 – 2025 வரை 11 தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளது. 2019ல் நாடாளுமன்றம், சட்டமன்றம், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 2022ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2024ல் நாடாளுமன்றம், விளவங்கோடு இடைத்தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், 2025ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என DMK தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Similar News
News September 9, 2025
டிராகனை பாராட்டிய அல்லு அர்ஜுன்

டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அஷ்வத், நீங்கள் காட்டிய அன்பிற்கும், தெரிவித்த பாராட்டுக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் உடனிருந்துள்ளார். இதையடுத்து, இவர்களின் கூட்டணியில் படம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News September 9, 2025
செப்டம்பர் 9: வரலாற்றில் இன்று

*1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. *1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது. *2002 – பீகாரில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர். *1967 – பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பிறந்த நாள்.*1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது. *2011 – நடிகை காந்திமதி மறைந்த நாள்.
News September 9, 2025
தனியாரை நாடும் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹60 லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு கொள்முதல் நிலையங்களில் உலர்த்தும் வசதி, சாக்குப்பை இருப்பு இல்லை எனவும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறினர். அரசு கொள்முதல் நிலையங்களில் பல பிரச்னைகள் இருப்பதால், தனியாரில் குவிண்டாலுக்கு ₹2,300 கொடுத்தாலும் தாங்கள் அதை ஏற்றுக்கொள்வதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.