News March 18, 2025
திமுக வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, ராஜமாணிக்கம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திமுகவின் வெற்றி செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 19, 2025
கோலி அதிருப்தி எதிரொலி: விதியை மாற்றும் பிசிசிஐ?

வெளிநாட்டு பயணங்களில் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கலாம் என்ற விதியை BCCI மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நடைமுறை வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும், குடும்பத்தின் ஆதரவு எப்போதும் முக்கியம் என்றும் கோலி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், விதியில் மாற்றம் கொண்டு வர BCCI முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
News March 19, 2025
2 குழந்தைகள் பெற்றால் வரி இல்லை… எங்கு தெரியுமா?

குழந்தை பெற்ற தாய்மார்கள் வரி கட்ட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவில் அல்ல, ஹங்கேரியில். மக்கள் தொகை குறைந்து வருவதால் அந்நாட்டு PM விக்டர் ஆர்பன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘1 குழந்தை பெற்ற பெண்கள் 30 வயது வரையும், 2 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி கட்ட வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த நிலை வருமா?
News March 19, 2025
நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதி: பட்நாவிஸ்

நாக்பூரில் நிகழ்ந்த கலவரம் திட்டமிட்ட சதிச் செயல் என மஹாராஷ்டிரா CM தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலவரம் குறித்து பேசிய அவர், அவுரங்கசீப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க சாவா திரைப்படமே காரணம் என விளக்கம் அளித்தார். இக்கட்டான சூழலில் மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார். கலவரம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.