News February 28, 2025
200 இடங்களில் திமுக வெல்லும்: நடிகர் வடிவேலு

ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக நடிகர் வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் என்றும், யாருக்கும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெல்லும் எனவும், 200 இடங்களில் கண்டிப்பாக பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2025
போதும்… நிப்பாட்டுங்க… கடுப்பான அதிபர் டிரம்ப்!

அமெரிக்கா சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். கனடாவுக்கு கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவெடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறீர்களா? அது நடக்காது என பதிலளித்துக் கொண்டிருந்தார். திடீரென இடையில் குறுக்கிட்ட டிரம்ப் போதும், நன்றி என முடித்துக் கொண்டார்.
News February 28, 2025
நியூஸி.க்கு எதிராக ரோஹித் களமிறங்குவது சந்தேகம்?

CT தொடரில், IND vs NZ மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான பயிற்சியில் ரோஹித் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம் எனப்படுகிறது. ரோஹித் இல்லனா யாரு டீம் கேப்டன்?
News February 28, 2025
பிரபல நடிகர் உத்தம் மொகந்தி காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் உத்தம் மொகந்தி (66) உடல்நலக்குறைவால் நேற்று இரவு டெல்லியில் காலமானார். ஒடிசாவை பூர்விகமாகக் கொண்ட இவர், 1977இல் ‘அபிமான்’ படம் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். ஒடியா, இந்தி, பெங்கால் ஆகிய மொழிகளில் 130 படங்களில் நடித்துள்ளார். மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள உத்தம் மொகந்தியின் மறைவுக்கு ஒடிசா CM மோகன் சரண் மாஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.