News October 4, 2025
200 இல்லை 2 தொகுதிகள் கூட திமுகவுக்கு கிடைக்காது: வானதி

ஸ்டாலின் கனவு காண்பது போல் 2026 தேர்தலில் 200 தொகுதிகள் அல்ல 2-ல் கூட வெற்றி பெற முடியாது என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். திமுக அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் மோடியை எதிர்த்து மட்டுமே பேசிக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். திமுகவை வீட்டுக்கு அனுப்பவே அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 4, 2025
சச்சினுக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா

வெ.இண்டீஸுக்கு எதிரான தொடரில் சதத்துடன், 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் டெஸ்டில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்றவர்கள் பட்டியலில் ஜடேஜா(11) 2-வது இடத்திற்கு முன்னேறினார். 14 ஆட்ட நாயகன் விருதுகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். டெஸ்டில் ஜடேஜா 3,990 ரன்களை, 334 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
News October 4, 2025
சற்றுமுன் அதிரடி கைது

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து யூடியூபர் மாரிதாஸை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் துயர வழக்கில் விஜய் & TVK தரப்பில் யாருமே நீதிமன்றத்தில் தங்கள் பக்க வாதத்தை முன்வைக்க இயலாத நிலையை உருவாக்கி, தந்திரமாக திமுக ஒரு நீதிமன்ற நாடகத்தையே நடத்தி முடித்துள்ளது என்று X-ல் விமர்சித்திருந்தார். இந்நிலையில், உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக, சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.
News October 4, 2025
கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் விசாரணை

கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வரிசையாக சென்றது சர்ச்சையானது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர். கூட்ட நெரிசல் குறித்து ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தது யார்? எத்தனை மணிக்கு அழைப்புகள் வந்தன என்று போலீசார் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.