News April 10, 2024
திமுகவிற்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது

பிரித்தாலும் சூழ்ச்சியை மக்கள் புரிந்துக் கொண்டால் திமுகவிற்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேலூரில் பிரசாரம் செய்த அவர், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? என கேள்வி எழுப்பினார். இனம், மதம், சாதியின் பெயரால் திமுக மக்களை தூண்டி விடுகிறது. திமுகவின் மோசமான அரசியலை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன் என சூளுரைத்தார்.
Similar News
News March 20, 2026
திருச்சி: அச்சக உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அச்சக உரிமையாளர்கள் தாங்கள் தேர்தலுக்காக அச்சடித்த துண்டு பிரசுரம், போஸ்டர் மற்றும் பதாகைகள் கீழ் பகுதியில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விபரத்தினை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மேலும் அச்சடிக்கப்பட்ட நகல் மற்றும் பிரசுரம் செய்தவரின் உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
தூத்துக்குடி: Whatsapp-ல் ஆதார் – CLICK HERE

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 20, 2026
பிள்ளைகளுக்காக வீடு கட்ட வேண்டாம்..

பிள்ளைகளுக்காக வீடு கட்டுவதை பெற்றோர் தவிர்க்கலாம் என Knot Dating நிறுவனர் ஜஸ்விர் சிங் கூறியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போதைய தலைமுறையினர் பலரும் வெளியூர் (அ) பிறநாடுகளில் குடியேறுவதால், சொந்த ஊரில் கஷ்டப்பட்டு பெற்றோர் வீடு கட்ட வேண்டாம் என அவர் கூறுகிறார். அதற்கு பதில் ஓய்வுகால சேமிப்பு, தனிப்பட்ட மகிழ்ச்சியில் முதலீடு செய்யவும் அவர் அறிவுறுத்துகிறார். உங்கள் கருத்து?


